March 29, 2023

BusinessMinutes

Twice a Week

ரூபாய் 36,67,000க்கு அறிமுகமாகும் நியூ சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி கார்

Copyright William CROZES @ Continental Productions

சிட்ரோய்ன் இந்தியா, ரூபாய் 36,67,000 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற சிறப்பு அறிமுக விலையில் நியூசி5 ஏர்கிராஸ் எஸ்யுவி அறிமுகம் செய்யப்படுவதை அறிவித்திருக்கிறது. தனித்துவ அம்சங்களுடன் நவீன மற்றும் உயிரோட்டமான ஆளுமைத்தன்மை வழங்குகின்ற ஒரு வடிவமைப்பு மேம்பாட்டை நியூ சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி பெற்றிருக்கிறது. 2022-ம் ஆண்டில் இப்போது வெளிவந்திருக்கும் இக்கார், எஸ்யுவி – ன் வசதி மற்றும் தாராள இடவசதியை வலுப்படுத்துகிறவாறு உள்அலங்கார பொருட்கள் மற்றும் உயர்தர வண்ணங்களால் சிறப்பான ஆதரவைப் பெற்றிருக்கின்ற ஒரு கூர்மையான வடிவமைப்புடன் அதிக கவர்ச்சியானதாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் இருக்கிறது. சிட்ராய்ன்-க்கு பிரத்யேகமான புராக்ரெசிவ் ஹைட்ராலிக் குஷன்ஸ் சஸ்பென்ஷன் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களில் அதிர்வினை தாங்கும் திறனை மேம்படுத்துகிறது மற்றும் உண்மையான “பறக்கும் கம்பளம்” அனுபவத்தை தரும் வகையில் முழுமையான சௌகரியத்தோடு பயணிகள் பயணிப்பதை உறுதி செய்கிறது. மூன்று தனிப்பட்ட நழுவுகின்ற, சாய்ந்து கொள்கின்ற மற்றும் மடித்துக் கொள்ளக்கூடிய பின்புற இருக்கைகளை வழங்குகின்ற இப்பிரிவின் ஒரே எஸ்யுவி ஆக திகழும் இது ஒரு உண்மையான எஸ்யுவியில் மாடுலாரிட்டியை அனுபவிக்கிறது. இக்காரின் பூட் (கொள்ளளவு), இப்பிரிவில் ஒரு புதிய சாதனை அளவாகும்: 580 லிட்டரிலிருந்து, 1630 லிட்டர் வரை ஆகும். காருக்குள் பட்டுப்பூச்சி கூட்டின் விளைவை மேலும் மேம்படுத்துவதற்காக ஒலி சார்ந்த லேமினேட்டட் முன்புற ஜன்னல்களின் மூலம் அதனை மேலும் மேம்படுத்துகின்ற விருப்பத்தேர்வுடன் ஒலி தொடர்பான பண்பியல்புகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. சிட்ரோய்ன் இந்தியா – ன் பிராண்டு ஹெட் திரு. சௌரப் வத்ஸா இது தொடர்பாக பேசுகையில், “சௌகரியம், காரின் உட்புறத்திற்குள் தாராள இடவசதி மற்றும் மாடுலாரிட்டி ஆகிய அதன் பலங்களை இன்னும் மேம்படுத்தியிருக்கும் நியூ சிட்ரோய்ன் சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி, இன்னும் அதிக அழகுடன் கூர்மையான வெளிப்புற வடிவமைப்பு, உயர்தர வண்ணங்கள் மற்றும் உட்புற அலங்காரத்திற்கு சிறப்பான பொருட்கள் ஆகியவற்றின் மூலம் மேலும் சிறப்பானதாக மாற்றம் கண்டிருக்கிறது. முன்புறத்தில் ஒரு புதிய வடிவமைப்பு மொழியை சி5 ஏர்கிராஸ் அறிமுகம் செய்கிறது. வளைவுகள் அதிக கட்டமைப்பிலான கோடுகளுக்கு வழிவகுத்திருக்கின்றன. பின்புறத்தில் ஒரு புதிய முப்பரிமாண விளக்கு சிக்னேச்சர், புதிய 18 இன்ச் டைமண்டு கட் அலாய் வீல்கள் மற்றும் 10 இன்ச் டச் ஸ்கீரீன் மற்றும் சென்டர் கன்சோலின் ஒரு புதிய வடிவமைப்பு ஆகியவை இந்த சி-எஸ்யுவி பிரிவில் வாடிக்கையாளர்களை நிச்சயம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை,” என்று கூறினார்.

Spread the love