March 28, 2023

BusinessMinutes

Twice a Week

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் இந்தியாவில் ரூ 9,860 கோடி முதலீடு செய்ய உள்ளது

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் இந்தியாவில் ரூ 9,860 கோடி முதலீடு செய்ய உள்ளது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முழு ஆதரவை உறுதி செய்தார் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் , உலகின் மிகப்பெரிய நகை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்று , அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ரூ 9.860 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது . கொச்சியில் சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் வட்ட மேசை கூட்டத்தில் மலபார் குழுமத்தின் தலைவர் திரு . எம்.பி. அகமது மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் இந்தியா ஆபரேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் திரு . ஓ . ஆஷார் ஆகியோர் இணைந்து ஒன்றாக இதனை அறிவித்தனர் . இந்நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு . பியூஷ் கோயல் , மாநில தொழில்துறை அமைச்சர் திரு பி . ராஜீவ் ஆகியோர் உடனிருந்தனர் . மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் . கருவூலம் மற்றும் புல்லியன் பிரிவின் தலைவர் திரு . திலீப் நாராயணனும் மாநாட்டில் பங்கேற்றனர் . மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் . அதன் ‘ மேக் இன் இந்தியா ( Make in India ) , மார்க்கெட்டு தி வேர்ல்ட் ( Market to the World ) முயற்சியினை அதிகரிப்பதற்காக சமீப காலமாக அதன் முதலீடுகளை இரட்டிப்பாக்கி வருகிறது . 2025 ஆம் ஆண்டுக்குள் நகை விற்பனையாளர் 500 புதிய ஷோரூம்களைத் திறக்க திட்டமிட்டுள்ளனர் . இதன் மூலம் சுமார் 11,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் . தேசிய தொழில்துறை காரிடார் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக முதலீட்டாளர்களின் வட்ட மேசை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது . மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு . பியூஷ் கோயல் , இந்திய அரசின் லட்சியமான ‘ மேக் இன் இந்தியா ‘ திட்டத்தை ஊக்குவிப்பதிலும் , அதன் விரிவாக்கத் திட்டங்களின் மூலம் பெருமளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் நிறுவனம் முன்னுதாரணமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று பாராட்டினார் . இந்த விஷயத்தில் நிறுவனத்தின் புதிய முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும் என அவர் உறுதியளித்தார் . தற்போது , மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் பத்து நாடுகளில் 280 க்கும் மேற்பட்ட ஷோரூம்களையும் , ஐந்து நாடுகளில் 14 உற்பத்தி அலகுகளையும் கொண்டுள்ளது . இதில் 4,092 முதலீட்டாளர்களும் மற்றும் 14,169 நிர்வாகப் பணியாளர்களைக் கொண்டுள்ளது . இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் ரூ .45,000 கோடி வர்த்தகத்தை இலக்காகக் கொண்டுள்ளது . மைக்ரோசாஃப்ட் , IBM , அக்சென்ச்சர் , IBM , E & Y டெலாய்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளை இந்நிறுவனம் தனது வணிக மாதிரியை மாற்றுவதற்காகப் பயன்படுத்துகிறது . மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் திட்டங்களைச் செயல்படுத்துகையில் சுற்றுச்சூழல் சமூக மற்றும் ஆளுகை ( ESG ) விதிமுறைகளை உறுதியாகப் பின்பற்றுகிறது . இது ஒரு சமூக பொறுப்புள்ள நிறுவனம் மற்றும் அதன் லாபத்தில் 5 % சமூக தொடர்புடைய நோக்கங்களுக்காக ஒதுக்குகிறது .

Spread the love