March 29, 2023

BusinessMinutes

Twice a Week

மதுரையைச் சேர்ந்த ஆகாஷ் பைஜூஸ் மாணவன் த்ரிதேவ் விநாயகா.எஸ் அகில இந்தியா தரவரிசையில் 30வது இடத்தை பெற்றுள்ளார்

நீட் யுஜி 2022 தேர்வில் மதுரையைச் சேர்ந்த ஆகாஷ் பைஜூஸ் மாணவன் த்ரிதேவ் விநாயகா.எஸ் அகில இந்தியா தரவரிசையில் 30வது இடத்தை பெற்றுள்ளார்
• த்ரிதேவ் விநாயகா.எஸ் மருத்துவ நுழைவுத் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார்
மதுரையைச் சேர்ந்த ஆகாஷ் பைஜூஸ் மாணவன் த்ரிதேவ் விநாயகா.எஸ் ஆகியோர் தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 30வது இடம் பெற்று நிறுவனம் மற்றும் பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். த்ரிதேவ் 720க்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது.

உலகின் கடினமான நுழைவுத் தேர்வாகக் கருதப்படும் நீட் தேர்வில் வெற்றி பெற த்ரிதேவ் ஆகாஷ் பைஜூஸில் 2 ஆண்டு வகுப்பறை திட்டத்தில் சேர்ந்தார். நீட் தேர்வின் சிறந்த சதவீதம் பெற்றவர்கள் பட்டியலில் அவர் நுழைந்ததற்குக் காரணம், கருத்துகளைப் புரிந்துகொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் அவரின் கற்றல் அட்டவணையை கண்டிப்பாகப் பின்பற்றியதே ஆகும். “கருத்துக்களை புரிந்து கொள்ளவும், கற்றுக் கொடுத்து எனக்கு உதவியதற்கும் நான் ஆகாஷ் பைஜூஸ் நிறுவனத்துக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதேநேரம் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளை, நிறுவனத்தின் உள்ளடக்கம் மற்றும் பயிற்சி இல்லாமல் நான் புரிந்து கொண்டிருக்க மாட்டேன்” என்று கூறினார்.

மாணவர்களை வாழ்த்திப் பேசிய ஆகாஷ் பைஜூஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஆகாஷ் சவுத்ரி, “த்ரிதேவ் மற்றும் அப்சராவின் முன்மாதிரியான சாதனையை நாங்கள் வாழ்த்துகிறோம். நீட் 2022 தேர்வில் நாடு முழுவதும் இருந்து 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபெற்றனர். மாணவர்களின் இந்த சாதனை அவர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு அளித்த ஆதரவைக் காட்டுகிறது. மாணவர்களின் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘’தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கல்வி ஆண்டுகளில், நீட் தேர்வில் மாணவர்களை அதிக சதவீத மதிப்பெண் பெற்றவர்களாக மாற்ற ஆகாஷ் பைஜூஸ் கூடுதல் கவனம் செலுத்தியது. எங்கள் மாணவர்களுக்கு எப்போதும் கிடைக்கும் வகையில் எங்கள் டிஜிட்டல் இருப்பை நாங்கள் தீவிரப்படுத்தினோம். நாங்கள் ஆய்வுப் பொருட்களையும், கேள்வி வங்கிகளையும் ஆன்லைனில் அணுகும்படி செய்தோம். தேர்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்து பல மெய்நிகர் ஊக்க அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தினோம். எங்களது முயற்சிகள் பலனளிப்பதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்கள் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களில் இருந்து தெரிகிறது. அவர்களில் பலர் தங்கள் விருப்பப்படி முன்னணி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கான நிலையில் உள்ளனர்” என்றார்.

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் இளங்கலை மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) மற்றும் ஆயுஷ் (BAMS, BUMS, BHMS, முதலியன) படிப்புகளை தொடர விரும்பும் மாணவர்களுக்கான தகுதித் தேர்வாக தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

Spread the love