March 28, 2023

BusinessMinutes

Twice a Week

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக திரு. ரா. ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக திரு. ரா. ரவிச்சந்திரன் பொறுப்பேற்புதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக திரு. ரா. ரவிச்சந்திரன், இ.வ.ப., 17.06.2022 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தைச் சேர்ந்த இவர், இந்திய வருவாய் பணியில் 1987ஆம் ஆண்டு சேர்ந்தார். இவர் மதுரையில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வேளாண்மைப் பட்டமும் மற்றும் கப்பல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.தற்போது, ‘தரவு ஆளுமை சிக்கல்கள்’ என்ற தலைப்பில் நிதியியல் துறையில் பிஎச்.டி. பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் மதிப்பீடு, விசாரணை, நிர்வாகம் மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் பல்வேறு பதவிகளில் நாடு முழுவதும் பணியாற்றியுள்ளார். அவரது மனைவி திருமதி . கீதா ரவிச்சந்திரன் அவர்களும், இந்திய வருவாய் பணியில் 1987ஆம் ஆண்டு சேர்ந்தார், அவர், தற்போது மும்பை வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையராக பணியாற்றி வருகிறார்.திரு. ரா. ரவிச்சந்திரன் அவர்கள், கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தில் பிரிதிநிதியாக துணை இயக்குநர் ஜெனரலாகவும், (SEBI) செபியின் தலைமை பொது மேலாளராகவும் (விசாரணை மற்றும் கண்காணிப்பு) பதவியில் இருந்தார்.ஐபிஓ (IPO) ஊழல் மற்றும் பென்னி ஸ்டாக் கையாடல் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசாரணை வழக்குகளை அவர் கையாண்டுள்ளார். வருமான வரித் துறையின் முதல் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு மற்றும் செபியின் ஒருங்கிணைந்த சந்தை கண்காணிப்பு அமைப்புகள் திட்டம் (IMSS) அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். மேலும், நாக்பூரில் உள்ள தேசிய நேர்முக வரிகள் பயிற்சி மையத்தில் (NADT) கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆகவும் பணியாற்றியுள்ளார்.பணமோசடி தடுப்புச் சட்டம், எல்லை தாண்டிய வரிவிதிப்பு, விஷன் 2020, பள்ளி செல்லும் குழந்தைகளிடையே நிதி அறிவு மற்றும் வருமான வரித் துறையின் முடிவுகள் கட்டமைப்பு ஆவணம் ஆகியவற்றின் கீழ் சட்டத்தை உருவாக்குவதற்காக நிதி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களில் அவர் ஒரு பகுதியாக இருந்தவர். அவர் பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், பல சர்வதேச மாநாடுகளில் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மத்திய பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களில் வருகை தரும் ஆசிரியராக இருந்துள்ளார். அவர் தென் கொரியாவில் சர்வதேச வரிவிதிப்பு, பரிமாற்ற விலை மற்றும் ஒப்பந்த சிக்கல்கள் என்ற தலைப்பில் OECD ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக, வருமான வரித் துறை அதிகாரிகளுக்கான புலனாய்வுக்கான டிஜிட்டல் சாட்சியப் புலனாய்வுக் கையேடு முதன்முறையாக அவரால் தயாரிக்கப்பட்டு, அக்டோபர், 2014இல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் வெளியிடப்பட்டது. மேலும் 2016 ஆம் ஆண்டு, முதல் முறையாக தரவு பகுப்பாய்வு கையேடு அவரால் தயாரிக்கப்பட்டது.பிட்காயின் பரிவர்த்தனைகள் மீதான அகில இந்திய செயல்பாட்டின் ஒரு பகுதியாக அவர் பிட்காயின் பரிமாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மீதான விசாரணையை கையாண்டார். இதன் விளைவாக அதிக அளவு வெளியிடப்படாத வருமானம் கண்டறியப்பட்டது என வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love