கிரெடாய் கோயம்புத்தூர், நடத்தும் ஃபோர்புரோ மெகா ரியல் எஸ்டேட் கண்காட்சி, ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வீடு வாங்குவோர் மற்றும் வங்கியாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. வீடு வாங்க விருப்பம் உள்ள ஒவ்வொருவரும் தமது பட்ஜெட், இருப்பிடம் மற்றும் தேவைக்கு ஏற்ப தனக்கேற்ற கனவு இல்லத்தை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் வீடு அல்லது வீட்டு மனைக்கு உடனடிக் கடன் வசதி அளிக்க பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் இதர வங்கிகள் ஸ்டால்களை அமைத்துள்ளன. இந்தக் கண்காட்சிக்கு ஒவ்வொரு வருடமும் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
இது குறித்து கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, செயலாளர் ராஜீவ் ராமசாமி, கண்காட்சி தலைவர் சுரேந்தர் விட்டல் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா துணை பொது மேலாளர் திரு. இன்பரசு ஆகியோர் கூறியதாவது :- கோவை கிரெடாய் சார்பில் 12வது முறையாக கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சியை கொடிசியா வளாகத்தில் வரும் ஜுலை 29 முதல் 31-ஆம் தேதி வரை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், 75-க்கும் மேற்பட்ட ரெரா (RERA) அங்கீகாரம் பெற்ற புராஜெக்ட்களை காட்சிப்படுத்துகின்றனர்.
மேலும் இக்கண்காட்சியல் 5 வங்கிகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையாளர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பகள் முதல் ஹாலிடே வில்லாக்கள், கேட்டட் கம்யூனிட்டிகள், வீட்டு மனைகள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் வரை இக்கண்காட்சியில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ள புராஜெக்டுகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் புராஜெக்;ட்டுகளும் உள்ளன.
சமீப காலங்களில் அதிக சொகுசு கொண்ட வீடுகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் வீட்டு மனைகளுக்கும் அதிக அளவு வரவேற்பு உள்ளது. வீட்டிலிருந்தே ஐடி கம்பெனி பணியாளர்கள் பணி புரிவதால் அவர்கள் பெரிய அளவிளான வீடுகளை எதிர்பார்க்கின்றனர். சற்று தொலைவில்இருந்தாலும் மக்கள் அதிக போக்குவரத்து வசதி கொண்டுள்ள இடங்களை பெரிதும் விரும்புகின்றனர். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் சில ஆண்டுகளாகக் குறைந்துள்ளதால் மேலும் பலர் வீடு வாங்குவதற்கு முன்வருகின்றனர். கட்டுமானத்தின் செலவு அதிகரித்திருந்தாலும் சொத்து வாங்குவதற்கான தேவை அதிகரித்து வருகிறது.
மேலும் பல முதலீட்டார்கள் ரியல் எஸ்டேட் துறையில், குறிப்பாக சிறிய நகரங்களில் அதிக லாபம் உள்ளதால், வணிகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். மேற்படி காரணங்களால் நமது பகுதியில் ரியல் எஸ்டேட் துறை பெறும் வளர்ச்சி கண்டு வருகிறது.
கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சியானது வீடு வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான தகவல்கள் முதல், வங்கிக் கடனும் ஆலோசனையும் ஒரே இடத்தில் அளித்து பல மக்களின் கனவு இல்லத்தை நனவாக்குகிறது. பாரத ஸ்டேட் வங்கி இந்த கண்காட்சியின் முக்கிய ஸ்பான்சர்களாக உள்ளது.
கிரெடாய் பற்றி :- இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்க கூட்டமைப்பு (CREDAI) என்பது இந்திய ரியல் எஸ்டேட் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இந்தியாவில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களின் உச்ச அமைப்பாகும். இந்த அமைப்பு இன்று 21 மாநிலங்களில் 221 நகரங்களில் 13,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ரியல் எஸ்டேட் தொழில் துறை மேம்பாட்டுக்காக இந்த அமைப்பு தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
கிரெடாய் கோயம்புத்தூர் பற்றி :- கிரெடாய் கோயம்த்தூர் அமைப்பு 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், கோவையில் உள்ள பெரும்பாலான தனியார் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களை அங்கத்தினர்களாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு, கோயம்புத்தூர் மண்டலத்தின் வளர்ச்சி மற்றும் ரியல் எஸ்டேட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுமான மற்றும் வீட்டுவசதி தொழில் துறையை சார்ந்த அரசாங்கக் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்து உறப்பினர்களுக்குத் தெரியப்படுத்துகிறது.
More Stories
HDFC Bank opened 11th branch in Kanyakumari district
HDFC Bank to upgrade 24 Government schools
Britannia Marie Gold has rolled out New packs featuring inspirational stories