March 29, 2023

BusinessMinutes

Twice a Week

இலவச சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை புதூர் சர்க்கரை நோய் சிகிச்சை மையத்தில் சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் இலவச சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இலவச கால் நரம்பு பரிசோதனை, ரத்த கொழுப்பின் அளவு, மூன்று மாத சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்பவர்களுக்கு பரிசோதனைக்கு முன்பு 10 மணி நேரம் சாப்பிடாமல் இருக்கவும், சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பரிசோதனைக்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டது. முகாமில் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் வினோத் நோயாளிகளுக்கு பரிசோதனைகள் செய்து இலவச ஆலோசனை வழங்கினார்.

Spread the love