திருச்சி
இதயத்தில் துளை ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு நிலைக்குச் சென்ற முதியவரின் உயிரைக் காப்பாற்றி திருச்சி அப்போலோ மருத்துவமனை இதய நோயியல் துறை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.இதில், ஃப்ரீ வால் ரப்சர் எனப்படும் இதயத்தில் துளை ஏற்படும் நிலையானது அரிதான, அதேவேளையில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சிக்கலான நிலையாகும். இதயத்தில் துளை ஏற்படுவதால் தொடர்ச்சியாக ரத்தம் வெளியேறி இதயம் செயலிழக்கும். இந்த நிலையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பைத் தடுக்க முடியாத சூழல் ஏற்படும். இப்படிப்பட்ட மோசமான உடல்நிலையில் அனுமதிக்கப்பட்ட 65 வயது முதியவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து அவரை உயிர் பிழைக்கவைத்துள்ளனர் மருத்துவர்கள். அங்கு உடனடி அவசர இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக இதய ரத்தக்குழாய்கள் சரி செய்யப்பட்டு இதயத்திற்கு போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், இதயம் சீராக ரத்தத்தை பம்ப் செய்யவும் வழிசெய்யப்பட்டது. அன்னுலோபிளாஸ்டி மூலம் மிட்ரல் வால்வுகள் சரி செய்யப்பட்டு கசிவு தடுக்கப்பட்டது. அத்துடன் துளையும் அடைக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் இதயத்தின் இணைப்பு முற்றிலுமாக பைபாஸ் செய்யப்பட்டு CPB சாதனத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல்நிலை படிப்படியாக மேம்பட்ட நிலையில் 6வது நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பரிசோதித்தபோது அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தார்.அப்போலோ மருத்துவமனை மதுரை மண்டல முதன்மை இயக்க அலுவலர் நீலக்கண்ணன் அவர்கள் உலக இருதய தின வாழ்த்துக்களை கூறி அனைவரும் இருதய நலத்தை காப்பது அவசியம் எனவும் திருச்சி அப்போலோ மருத்துவமனை பச்சிளம் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை முதல் அனைத்து வயதினருக்கும் ஏனைய இருதய பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் கைதேர்ந்த மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டது எனக்கூறினார்உயிரிழப்பை ஏற்படுத்தும் தீவிர அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட முதியவரின் உயிரைக் காப்பாற்றி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்த இதய நோய் நிபுணர்களை திருச்சி அப்போலோ மருத்துவமனை மூத்த பொதுமேலாளர் சாமுவேல் பாராட்டினார்.இந்த செய்தியாளர் சந்திப்பில், நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்த டாக்டர் காதர் சாகிப், இதயநோய் சிகிச்சை சிறப்பு நிபுணர்கள் ரவீந்திரன், சாம் சுந்தர், ஸ்ரீ காந்த் பூமணா, அரவிந்த், ரோகிணி, சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், இதய மயக்கவியல் நிபுணர் மற்றும் துணை பொது மேலாளர் சங்கீத் ராம மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Reading your article has greatly helped me, and I agree with you. But I still have some questions. Can you help me? I will pay attention to your answer. thank you.