March 29, 2023

BusinessMinutes

Twice a Week

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவை தொடர்பாக

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ( IPPB ) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ( MoU ) மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்களின் முன்னிலையில் கையெழுத்தானது மாநில அரசின் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறும் சுமார் 7,15,761 ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை , ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வருடாந்திர நேர்காணலிற்காக ( Mustering ) சமர்ப்பிக்கின்றனர் . தற்போது , ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களது விருப்பங்களின் அடிப்படையில் பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வருடாந்திர நேர்காணல் ( Mustering ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது , ( i ) ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகசென்று பதிவு செய்தல் ( ii ) தபால் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் ( ii ) மின்னணு விரல்ரேகை சாதனத்தைப் பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் ( DLC ) சமப்பித்தல் . மேலும் , கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் வருடாந்திர நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது . தற்போது ஜூலை முதல் செப்டம்பர் 2022 வரையிலான மாதங்களில் நடைபெறும் வருடாந்திர நேர்காணலில் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களின் வயதினை கருத்தில் கொண்டும் அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் ( IPPB ) மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஜீவன் பிரமான் இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கான சேவையை உள்ளடக்கிய ஐந்து முறைகளிலான வருடாந்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த தமிழக அரசானது உத்தரவினை பிறப்பித்துள்ளது . இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது ( IPPB ) ஒரு மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ரூ .70 / என்ற கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேவைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது . ஓய்வூதியதாரர்களுக்கு இச்சேவையை வழங்குவதற்காக , இன்று ( 31.05.2022 ) சென்னை , தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் ( IPPB ) புரிந்துணர்வு ஒப்பந்தம் ( MoU ) கையெழுத்தானது . திரு . நா.முருகானந்தம் , இ.ஆ.ப. , கூடுதல் தலைமைச் செயலாளர் , நிதித்துறை , திரு . தி.ந.வெங்கடேஷ் , இ.ஆ.ப .. ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை , திரு . குருசரண் ராய் பன்சால் , தலைமை பொது மேலாளர் , இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் , புது தில்லி , திரு . ப.செல்வகுமார் . முதன்மை அஞ்சல் துறை தலைவர் , தமிழ்நாடு வட்டம் , திரு . என்.ஆர்.திவாகர் , உதவி பொது மேலாளர் , இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனம் , தமிழ்நாடு வட்டம் , திரு . க.நடராஜன் , அஞ்சல் துறை தலைவர் , சென்னை நகர மண்டலம் மற்றும் நிதித்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர் . கூடுதல் தலைமைச் செயலாளர் , நிதித்துறை

Spread the love